search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மெட்ரோ"

    • நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களிலும், நிமிடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித சிரமும் இன்றி பயணிக்க செய்யும் சேவையை மெட்ரோ ரெயில் வழங்குகிறது.
    • சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    சென்னை :

    பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.

    நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களிலும், நிமிடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித சிரமும் இன்றி பயணிக்க செய்யும் சேவையை மெட்ரோ ரெயில் வழங்குகிறது. இதனால் சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக க்யுஆர் குறியீடு, வாட்ஸ்அப், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையான ஆன்லைன் முறைகளில் பயணச்சிட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெறும் வசதி தடைபட்டது. இதனால் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் பெற்றுக் கொண்டு பயணத்தை மேற்கொண்டனர்.

    இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த நிர்வாகம் சிஎம்ஆர்எல்-ல் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளது.

    • தற்போது உள்ள 1 மற்றும் 2-ம் கட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதைக்கு மேலே இந்த வழித்தடம் அமைகிறது.
    • அந்த பகுதியை பயணிகள் மெட்ரோ ரெயில் மூலம் கடக்கும் போது புதிய உணர்வை ஏற்படுத்தும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட திட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் 5-வது வழித்தடத்தில் கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிரமிக்க வைக்கும் உயரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

    தற்போது உள்ள 1 மற்றும் 2-ம் கட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதைக்கு மேலே இந்த வழித்தடம் அமைகிறது.

    இதனால் அந்த பகுதியை பயணிகள் மெட்ரோ ரெயில் மூலம் கடக்கும் போது புதிய உணர்வை ஏற்படுத்தும். இன்னும் சில ஆண்டுகளில் புதிய பாதையில் பயணிக்கும் போது நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்படும் மேம்பாலம், குறுக்காக கீழே செல்லும் மெட்ரோ ரெயில்களை பார்த்து ரசிக்க முடியும்.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் இதுவரை இல்லாத உயரத்திற்கு கிண்டியில் மிக உயரமான தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மிக உயரமான தூண்களை கட்டமைக்கும் பணி சவாலாக உள்ளது எனவும் இந்த வேலையை லார்சன் அண்ட் டூப்போரா நிறுவனம் மேற்கொண்டு உள்ளது.

    இதுகுறித்து திட்ட இயக்குனர் டி.அர்ச்சுணன் கூறியதாவது:-

    விம்கோ நகர்-விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கு மேலே இந்த மேம்பாலம் அமைவது பெரும் சவாலான பணியாகும்.

    'பேலன்ஸ் கான்டிலீவர்' என்ற பொறியியல் முறையை பின்பற்றி சமச்சீர் காண்டிலீவர் முறை 2 காரணங்களுக்காக எடுக்கப்படுகிறது.


    சாலையில் அதிக போக்குவரத்து இருக்கும் போது தரையில் குறைந்த இடவசதி இருப்பதாலும் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. மேலும் தூண்களை மிக உயரத்தில் கட்ட வேண்டும். இந்த முறையில் தூண்களுக்கு இடையே உள்ள தூரம் மிக அதிகம். முதல் கட்ட மெட்ரோ ரெயில் பணியில் அதே முறையை பயன்படுத்தி தூண்கள் கட்டப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி எல் அண்ட் டி திட்ட மேலாளர் கிருஷ்ண பிரபாகர் கூறியதாவது:-

    சமச்சீரான கேண்டிலீவர் கட்டுமானத்தில் கத்திப்பாரா சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டு பட்ரோடு மற்றும் ஆலந்தூர் இடையே கூர்மையான வளைவை உருவாக்க சிறப்பு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 125 மீட்டர் சுற்றளவுக்கு இந்த வளைவலான பாதை அமைகிறது.

    கத்திப்பாரா மேம்பாலத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டர் என்றாலும் சென்னை மெட்ரோ ரெயிலின் தாழ்வாரம் 20 மீட்டர் உயரத்தில் செல்கிறது. தூண்கள் 30 மீட்டருக்கும் அதிகமான உயரத்துடன் இருப்பதால் கான்கிரீட் அல்லது கட்டிட இடிபாடுகள் எவர் மீதும் விழாமல் இருக்கவும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.

    மிக உயரமான தூண்கள் அடித்தளம் கத்திப்பாராவில் உள்ள பால்வெல்ஸ் சாலையில் உள்ளது. இது சாதாரண தூண் போல் இல்லாமல் மிகப்பெரியது.

    உயரமான தூணின் அடித்தளம் 1.5 மீட்டர் விட்டம் மற்றும் 12 பைல்கள் கொண்டதாகவும் தற்போது அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டதால் தூண் கட்டுவதற்கான முக்கிய பணிகள் தொடங்க உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
    • 119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரெயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் வரையில் ஒரு வழித்தடத்திலும், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் சிறுசேரி- கிளாம்பாக்கம், பூந்தமல்லி- பரந்தூர், கோயம்பேடு- ஆவடி ஆகிய 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

    கோயம்பேடு- ஆவடி மெட்ரோ சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.

    119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரெயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை.
    • அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    * பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை x திரு.வி.க. சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    * ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.

    * அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

    * அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை X திரு.வி.க. சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும்.

    வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    • சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயணிகளை ஊக்குவிக்கவும் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை மெட்ரோ ரெயில் சேவைகளை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 15.12.2023 முதல் 15.03.2024 வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசு பொருள் வழங்கப்படும்.

    * முதல் மாதம் 15.12.2023 முதல் 14.01.2024 வரை

    * இரண்டாவது மாதம் 15.01.2024 முதல் 14.02.2024 வரை

    * மூன்றாவது மாதம் 15.02.2024 முதல் 15.03.2024 வரை

    இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி உடன் இணைந்து பரிசு பொருள்களை வழங்கும்.

    பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயணிகளை ஊக்குவிக்கவும் இவை வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை விரிவாக்கம் செய்வதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
    • பொது மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சலுகையுடன் ஒரு நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.

    சென்னை மெட்ரோ ரெயிலில் தினசரி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பொது மக்களுக்கு அவ்வப்போது சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.

    அந்த வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி ஒரு நாள் மட்டும் ரூ.5 கட்டணத்தில் பொது மக்கள் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.

    ஆனால், அதற்கு ஒரு நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாடிக் க்யூஆர், பேடிஎம், வாட்ஸ்அப் மற்றும் போன்பே மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தெற்கு ரெயில்வேயின் மின்சார ரெயில் சேவை நிறுத்தம்.
    • சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது.

    சென்னையில் நாளை மின்சார ரெயில் சேவை நிறுத்தப்படுவதால் மெட்ரோ ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    பராமரிப்பு பணிகள் காரணமாக தெற்கு ரெயில்வே சேவைகள் நாளை காலை 10.18 மணி முதல் மதியம் 14.45 மணி வரை மின்சார ரெயில் சேவை நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் பாதிக்கப்படுவதை குறைக்கும் நோக்கில், சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது.

    நீட்டிக்கப்பட்ட சேவை விவரம்:

    நீல வழித்தடம்: விம்கோ நகர் பணிமனை - விமான நிலையம் மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ - வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை காலை 08.00 முதல் 11.00 முதல், மாலை 05.00 முதல் இரவு 08.00 மணி வரை 3 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

    பச்சை வழித்தடம்: அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ - புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

    புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் - பரங்கிமலை மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 12 நிமிடங்கள் இடைவெளியில் ரெயில் இயக்கப்படுகிறது.

    புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் - விமான நிலையம் (வழி- கோயம்பேடு) மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 12 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

    • தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு.
    • இரு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட இருக்கிறது.

    தமிழ்நாட்டில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வருகிறது. வார இறுதியை தொடர்ந்து திங்கள்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து பலர் தங்களின் சொந்த ஊருக்கு செல்வர். இதன் காரணமாக பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் இரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது.

    அதன்படி, ஆயுத பூஜை தினமான 23.10.2023 (திங்கள்கிழமை) மற்றும் சரஸ்வதி பூஜை தினமான 24.10.2023 (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரு நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிகாக நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, நாளை 20.10.2023 மற்றும் 21.10.2023 (சனிக்கிழமை) இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

    நீட்டிக்கப்பட்ட நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இந்த மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவை 20.10.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 21.10.2023 (சனிக்கிழமை) என இரண்டு நாட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    • டிக்கெட்களை காண்பித்து மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம்.
    • மைதானத்திற்கு செல்லும் போது, இந்த சலுகை பொருந்தாது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நாளை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோத இருக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது.

    இதனிடையே போட்டி காரணமாக சென்னையில் நாளை (அக்டோபர் 13) மெட்ரோ ரெயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் போட்டிக்கான டிக்கெட்களை காண்பித்து மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ரசிகர்கள் போட்டி முடிந்த பிறகு, போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். ஆனால், போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இந்த சலுகை பொருந்தாது.

    பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் நோக்கி இரயில்கள் இயக்கப்படும்.

    புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் இரயில்கள் இயக்கப்படும். போட்டி நாளில் (13.10.2023) இரவு 11.00 மணி முதல் - 12.00 மணி வரை பச்சை வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடம் மாறுவதற்கான இரயில் சேவை இயக்கப்படாது.

    • முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன.
    • பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் (சிஎம்ஆர்எல்) சேவையை பயன்படுத்துவோர் இன்று (மே 17) முதல் ரெயில் டிக்கெட்களை வாட்ஸ்அப் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு அறிமுகம் செய்த இரண்டு மாதங்கள் கழித்து வாட்ஸ்அப் மூலம் இ-டிக்கெட்களை வினியோகம் செய்யும் பணிகளை சிஎம்ஆர்எல் துவங்கி இருக்கிறது.

    பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட் எடுக்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஞ்ச் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்ததும், அந்த எண்ணில் இருந்து மெட்ரோ ரெயில் நிலைய விவரங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். அதில் செல்ல வேண்டிய ரெயில் நிலையத்தை தேர்வு செய்ய வேண்டும்.

     

    இனி, டிக்கெட்டுக்கான பணம் செலுத்தும் ஆப்ஷன்கள் திரையில் தோன்றும். அதன்படி பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே போன்ற சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். புதிய வசதி மூலம் பயனர்கள் அவசர கால பயணத்திற்கோ அல்லது, எப்போதாவது பயணம் செய்பவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    மெட்ரோ ரெயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில், முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன. பின் டோக்கன்கள் வரிசையில், ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து கியூஆர் கோடு முறையில் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வரிசையில் தான் தற்போது வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. "கியூஆர் கோடு டிக்கெட்களை தவிர வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் அவசர கதியில் மெட்ரோ சேவையை பயன்படுத்துவோருக்கும், வரிசையில் நின்று டிக்கெட் வாங்க நேரமில்லாத பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பயண அட்டையை ரிசார்ஜ் செய்ய நேரமில்லாதவர்களும் அவசரத்திற்கு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்," என்று மெட்ரோ ரெயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி முன்னிலையில் ஒப்பந்தம்
    • கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழி சாலை வரை 27 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம்-4-ல் பூந்தமல்லியில் அமைக்கப்பட்டு வரும் பணிமனைக்கு ரூ.31 கோடியே 80 இலட்சம் மதிப்பில் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஸ்வஸ்திக்-எக்விப்லவாக்கி நிறுவனத்திற்கு ரூ.31.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) முன்னிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி) மற்றும் ஸ்வஸ்திக்-எக்விப்லவாக்கி நிறுவனத்தின் திட்ட தலைவர் ஷோபித் சக்சேனா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    'வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், நிறுவுதல், சோதனை செய்தல், பூந்தமல்லி பணிமனையில் இயந்திரங்கள் மற்றும் ஆலைகளை இயக்குதல் மற்றும் ஆயத்த தயாரிப்பு அடிப்படையில் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்".

    இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள 13 இயந்திரங்கள் மற்றும் இதர தளவாடங்கள் ஜூலை 2024 இல் பூந்தமல்லி பணிமனையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு தளத்தில் சோதனை செய்யப்படும். சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம்-4 கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழி சாலை வரை 26.1 கி.மீ. நீளமுள்ள உயர்மட்ட மற்றும் சுரங்கப்பதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் என மொத்தம் 27 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் பூந்தமல்லியில் ஒரு பணிமனை என இந்த வழித்தடத்தில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.

    இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எஸ். சதீஷ்பிரபு, துணை பொது மேலாளர் ஜெகதீஸ் பிரசாத், ஸ்வஸ்திக்-எக்விப்லவாக்கி நிறுவனத்தின் துணை குழு தலைவர் பிரசாந்த் நர்டேகர், பொது ஆலோசகரின் ரோலிங் ஸ்டாக் தலைவர் நந்தகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெட்ரோ ரெயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக வேண்டி ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது.
    • கொன்னூர் நெடுஞ்சாலையில் இருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை.

    சென்னை:

    சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக இன்று காலை முதல் 7 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக வேண்டி ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது.

    பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டபிள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

    கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, டேங்க் பண்ட் சாலை, சந்திரயோகி சமாதி தெரு மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    அல்லது கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர் சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, ஒட்டேரி சந்திப்பு, குக்ஸ் சாலை மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    அல்லது கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, போர்சுகீஸ் சாலை, கான்ஸ் டபிள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை வழியாக செல்லலாம்.

    கான்ஸ்டபிள் சாலையில் பில்கிங்டன் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல கூடிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் பில்கிங்டன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

    கனரக வாகனங்கள் கான்ஸ்டபிள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டபிள் சாலை, போர் சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

    கொன்னூர் நெடுஞ்சாலையில் இருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறம் திரும்பி டேங்க் பண்ட் சாலை வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×